அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்

புதிய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் நோக்கில் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவையை 2020.03.17 திகதியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தல்

தற்போது நாட்டில் நிலவும் சுகாதார நிலைமையை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில்,பொதுமக்கள் அதிக அளவில் ஒன்றுகூடும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பிரதான காரியாலயம் மற்றும் தென்மாகாண காரியாலயம் ஆகியவற்றில் அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை 2020.03.17  திகதி, அதாவது நாளைய தினம் தொடக்கம் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், அடையாளஅட்டை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பம் சாதாரண சேவையின் கீழ் வழமைப்போல் அனுப்பிவைக்க முடியும் என்பதுடன்,ஏதேனும் அத்தியாவசியமான தேவைக்காக அடையாள அட்டையை விரைவாக பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை ஏற்படின் மாத்திரம்,அதனை தமது கிராமசேவையாளர் ஊடாக உறுதிப்படுத்தி ,குறித்த விண்ணப்பத்தை அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு தயவுடன் அறியத்தருகின்றோம்.