அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்
 
வௌளம் மற்றும் மண்சரிவினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம்

வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய காணாமல் போன  தேசிய அடையாள அட்டைகள் மற்றும் சேதமடைந்த , தெளிவற்ற நிலைமையிலுள்ள தேசிய அடையாள அட்டைகளின் இணைப்பிரதியினை வழங்கும் விசேட வேலைத்திட்டமானது எமது திணைக்களத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது மேலும் படிக்க>>

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

உத்தியோகபூர்வ செயற்பணி ஜனாதிபதி மக்கள் சேவை
மூன்றாவது நிகழ்ச்சித்திட்டம் குருணாகல் மாவட்டம் (​ கணேவத்த பிரதேச செயலக பிரிவு )

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்பின் பேரில் , மதிப்பிற்குரிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கிணங்க உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மதிப்பிற்குரிய வஜிர அபேவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ்  ஜனாதிபதி செயலகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தலைமையில் “ உத்தியோகபூர்வ செயற்பணி – ஜனாதிபதி மக்கள் சேவை ”  இன் மூன்றாவது நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டம் குருணாகல் மாவட்டத்தினை உள்ளடக்கி மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் போது பிரதேச செயலக பிரிவுகள் மட்டத்தில் நடமாடும் சேவைகளை நடாத்தி குருணாகல் மாவட்டத்தில் அடையாள அட்டைகள் இல்லாத மக்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குதல் மற்றும் அது சம்பந்தமாக ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுத்தல்.மேலும் படிக்க>>

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

அத்துகல் புரயவில் அடையாள அட்டை அலுவலகம்............

மாண்புமிகு ஜனாதிபதியின் அபிலாஷையினை முன்னிறுத்தி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் மதிப்பிற்குரிய ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களின் வழிகாட்டலின் பேரில் வரலாற்று ரீதியான அத்துகல் புரவரயவில் நிர்மாணிக்கப்பட்ட ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் குடிவரவு – குடியகல்வு திணைக்கள வடமேல் மாகாண அலுவலகம் , உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ பாலித தெவரப்பெரும அவர்களின் மற்றும் உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பீ. நாவின்ன அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் திருக்கரங்களால் 2017.02.12 ஆம் திகதி மு.ப.9.00 மணிக்கு வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. மேலும் படிக்க>>

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

உத்தியோகபூர்வ செயற்பணியும் மக்கள் சேவையும்
இரண்டாவது நிகழ்ச்சித்திட்டம் – காலி மாவட்டம்

மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களின் ஆலோசனைக்கமைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ செயற்பணியும் மக்கள் சேவையும் முதல் நிகழ்ச்சித் திட்டம் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பொலன்னறுவை மாவட்டத்தை உள்ளடக்கி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. மேலும் படிக்க>>

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

2016 ஆம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டை இலக்கத்தில் மாற்றம்.

தேசிய அடையாள அட்டையில் இது வரையில் பாவனையிலிருந்த ஒன்பது இலக்கங்களுக்குப் பதிலாக அனைத்துப் பிரஜைகளினதும் அடையாள அட்டை இலக்கத்தின் மாற்றமானது 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல்  நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அடையாள அட்டை இலக்கத்தின் இறுதியில் காணப்பட்ட ஆங்கில எழுத்து நீக்கப்பட்டுள்ளதுடன், அவ்வடையாள அட்டை இலக்கமானது பன்னிரண்டு இலக்கமாக மாற்றம் பெற்றுள்ளது மேலும் படிக்க>>

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

இலங்கைப் பிரஜைகளின் ஆள் அடையாளத்தினை உறுத்திப்படுத்துவதற்கான தொழில் நுட்ப அட்டை.

ஆட்பதிவுத் திணைக்களமானது அனைத்து இலங்கைப் பிரஜைகளினதும் ஆள் அடையாளத்தினை உறுதி செய்யும் முகமாக, தொழில்நுட்ப மாற்றத்துடன் இணைந்து சிறப்பான மாற்றங்களுடன் தனது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மிக அண்மித்த காலப் பகுதிக்குள் இடைக்கால அடையாள அட்டையானது  புதிய தொழில் நுட்பங்களுடன் சிவில் விமான சேவையின் தரத்திற்கு அமையவும், மிகவும் சூட்சகமான பாதுகாப்பு உத்திகளுடனான அட்டை ஒன்றினை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது நீண்ட கால செயல்திட்டத்தின் முதற்கட்டமாவதோடு, உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பிரஜைகளின் ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள தொழில் நுட்பத்தினை இலங்கையர்களுக்கும் அறிமுகப்படுத்தும் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டமாகும். மேலும் படிக்க>>

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -