அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்
 

உத்தியோகபூர்வ செயற்பணியும் மக்கள் சேவையும்
இரண்டாவது நிகழ்ச்சித்திட்டம் – காலி மாவட்டம்

 
 

மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களின் ஆலோசனைக்கமைய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ செயற்பணியும் மக்கள் சேவையும் முதல் நிகழ்ச்சித் திட்டம் 2016ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் பொலன்னறுவை மாவட்டத்தை உள்ளடக்கி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.


அதன் இரண்டாவது  நிகழ்ச்சித் திட்டம் காலி மாவட்டத்தின் 19 பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி 20 நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. காலி மாவட்ட பொது மக்கள் முகங்கொடுக்கின்ற நிர்வாக , பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதே இப்  பொது மக்கள் உத்தியோகபூர்வ செயற்பணியின் இலக்காகும்.


 
     

அதற்கமைய அரச , தனியார் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் பலவற்றினதும் ஒத்துழைப்புடன் குறித்த பொது மக்கள்  பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இங்கு ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் , பதிவாளர் அலுவலகம் , சமூக சேவைகள் திணைக்களம் , சிறைச்சாலை திணைக்களம் , மோட்டார் வாகன திணைக்களம் , வெளிநாட்டு ​பணியகம் , தொழிற் பயிற்சி அதிகார சபை , விதாதா மத்திய நிலையம் , நில அளவை திணைக்களம் , தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் , தொழிலாளர் அலுவலகம் போன்ற 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அயராத பங்களிப்பினால் உத்தியோகபூர்வ செயற்பணியும் மக்கள் சேவையும் அர்த்தமாக்க முடிந்தது.