அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்
 

உத்தியோகபூர்வ செயற்பணி ஜனாதிபதி மக்கள் சேவை
மூன்றாவது நிகழ்ச்சித்திட்டம் குருணாகல் மாவட்டம்

(​ கணேவத்த பிரதேச செயலக பிரிவு )

 
 

மேன்மை தங்கிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்பின் பேரில் , மதிப்பிற்குரிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கிணங்க உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மதிப்பிற்குரிய வஜிர அபேவர்தன அவர்களின் வழிகாட்டலின் கீழ்  ஜனாதிபதி செயலகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் தலைமையில் “ உத்தியோகபூர்வ செயற்பணி – ஜனாதிபதி மக்கள் சேவை ”  இன் மூன்றாவது நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டம் குருணாகல் மாவட்டத்தினை உள்ளடக்கி மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகள் ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் போது பிரதேச செயலக பிரிவுகள் மட்டத்தில் நடமாடும் சேவைகளை நடாத்தி குருணாகல் மாவட்டத்தில் அடையாள அட்டைகள் இல்லாத மக்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குதல் மற்றும் அது சம்பந்தமாக ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக் கொடுத்தல்.


இந்நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்பக்கட்டமாக கணேவத்த பிரதேச செயலக பிரிவில் மக்கள் சேவை நிகழ்ச்சி திட்டம் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மதிப்பிற்குரிய வஜிர அபேவர்தன அவர்களின் தலைமையில் 2017.04.07 ம் திகதியன்று  கணேவத்த எஸ்.பீ. ஹேரத் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. இச்சந்தர்ப்பத்தில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் திரு.பீ. வியானி குணதிலக அடங்கலாக உத்தியோகத்தர்கள் பலர் பங்கு பற்றியதுடன்  குருணாகல் மாவட்டத்தில் வசிக்கின்ற அடையாள அட்டை வழங்கக்கூடிய அனைத்து நபர்களுக்கும் அடையாள அட்டை வழங்கி , அடையாள அட்டை இல்லாதவர்களின் எண்ணிக்கையை சூனியமாக்குதல் இதன் இலக்காகும்.


 
     

 

 

 

 

 

இந்த ஜனாதிபதி மக்கள் சேவை நிகழ்ச்சித்திட்டத்தில் கணிசமான விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் குறைபாடுகள் எதுவுமின்றி மற்றும் உரிய தரத்திலான புகைப்படங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கின்ற விண்ணப்பதார்ரகளது அடையாள அட்டைகள் விரைந்து தயாரிக்கப்படுவதுடன் குறைபாடுகள் அடங்கிய விண்ணப்பங்களுக்கான அடையாள அட்டைகள் தயாரிக்கும் செயல் முறையில் தாமதம் ஏற்படலாம்.


ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்துடன் பதிவாளர் நாயகம் திணைக்களம் , மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் , சமூக சேவைகள் திணைக்களம் , ஓய்வூதிய திணைக்களம் ஆகிய அரச நிறுவனங்கள் பலவற்றின் சேவைகள் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய பெறுமதியான சந்தர்ப்பம் இந்த நடமாடும் சேவை ஊடாக பிரதேச வாசிகளுக்கு கிடைக்கின்றது. உத்தியோகபூர்வ செயற்பணி மூன்றாவது நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்  குருணாகல் மாவட்டத்தை உள்ளடக்கி ஏனைய அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் குறுகிய காலத்தினுள் இத் திணைக்களத்தின் மூலம் நடமாடும் சேவைகளை நடாத்துவதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.