அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்
 

இலங்கைப் பிரஜைகளின் ஆள் அடையாளத்தினை உறுத்திப்படுத்துவதற்கான தொழில் நுட்ப அட்டை.

ஆட்பதிவுத் திணைக்களமானது அனைத்து இலங்கைப் பிரஜைகளினதும் ஆள் அடையாளத்தினை உறுதி செய்யும் முகமாக, தொழில்நுட்ப மாற்றத்துடன் இணைந்து சிறப்பான மாற்றங்களுடன் தனது நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மிக அண்மித்த காலப் பகுதிக்குள் இடைக்கால அடையாள அட்டையானது  புதிய தொழில் நுட்பங்களுடன் சிவில் விமான சேவையின் தரத்திற்கு அமையவும், மிகவும் சூட்சகமான பாதுகாப்பு உத்திகளுடனான அட்டை ஒன்றினை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது நீண்ட கால செயல்திட்டத்தின் முதற்கட்டமாவதோடு, உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பிரஜைகளின் ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள தொழில் நுட்பத்தினை இலங்கையர்களுக்கும் அறிமுகப்படுத்தும் பொருட்டு மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டமாகும்.

1972 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம், முதல் முறையாக கையால் எழுதப்பட்டு விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைக்காகவும், மற்றும் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி முதல் சிங்களம் மற்றும் தமிழ் மொழி மூலம் கணனித் தொழில் நுட்ப முறையினூடாக அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகின்ற அடையாள அட்டைக்காகவும், இன்று வரை பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உள்ளீட்டு அட்டை என்ற பாரம்பரிய அம்முறையிலிருந்து விலகி  புதிய தொழில் நுட்ப அட்டையின் மூலம் புதிய திருப்பத்துடன் இந்த இடைக்கால தேசிய அடையாள அட்டையினை விநியோகிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இங்கு பிரஜைகளின் ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்துவதற்காக அட்டையில் அச்சிடப்படும் தரவுகள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் அச்சிடப்படுவதற்கும், சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் தரத்திற்கு அமைவாக புகைப்படத்தினை உள்ளடக்கிய அடையாள அட்டையினை விநியோகிப்பதற்கும் நடவடிக்கையினை மேற்கொள்வதுடன், இதன் மூலமாக ஆள் அடையாளத்தினை மிகச் சரியாகவும் நம்பகத் தன்மையுமானதாக உறுதிப்படுத்தக்கூடிய வேலைத்திட்டமாகும் என்பது ஆட்பதிவுத் திணைக்களத்தின் நம்பிக்கை ஆகும்.