அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்
 

பேண்தகு யுகத்தின் புதிய சூரிய ஔிக்கீற்று
அத்துகல் புரயவில் அடையாள அட்டை அலுவலகம்............

 
 

மாண்புமிகு ஜனாதிபதியின் அபிலாஷையினை முன்னிறுத்தி இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் மதிப்பிற்குரிய ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களின் வழிகாட்டலின் பேரில் வரலாற்று ரீதியான அத்துகல் புரவரயவில் நிர்மாணிக்கப்பட்ட ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் குடிவரவு – குடியகல்வு திணைக்கள வடமேல் மாகாண அலுவலகம் , உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கௌரவ பாலித தெவரப்பெரும அவர்களின் மற்றும் உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ எஸ்.பீ. நாவின்ன அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் திருக்கரங்களால் 2017.02.12 ஆம் திகதி மு.ப.9.00 மணிக்கு வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது.


குருணாகல் மற்றும் புத்தளம் என்ற இரு மாவட்டங்களை உள்ளடக்கியதான இம் மாகாண அலுவலகத் திறப்பு விழாவிற்கு ஆட்களைப் பதிவு செய்யும் ஆணையாளர் நாயகம் திரு.பீ. வியானி குணதிலக , மேலதிக ஆணையாளர் நாயகம் திருமதி. ரஞ்சனி ஜயக்கொடி , இயக்கம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆணையாளர் திரு. ஹர்ஷ இலுக்பிட்டிய மற்றும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் உதவி ஆணையாளர்கள் , கருத்திட்டப் பணிப்பாளர் , பிரதான கணக்காளர் , நிர்வாக உத்தியோகத்தர் , திணைக்களத்தின் ஏனைய உத்தியோகத்தர்கள் ஆகிய விருந்தினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

பொதுமக்களுக்கு மிகவும் சமீபமாகச் சென்று சேவைகளை வழங்கும் நோக்கில் தாபிக்கப்பட்ட ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் வடமேல் மாகாண அலுவலகத்தின் உதவி ஆணையாளர் திரு.எம்.எம். நந்தன மஹீபால அவர்களின் மேற்பார்வையில் கிளைத் தலைவர்களான திரு. கித்சிறி ஏக்கநாயக்க மற்றும் திரு. சுசந்த ரத்நாயக்க என்போரின் செயற்பாட்டில் இயங்கும். இந்த  அலுவலகத்தின் ஊடாக புதிய அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளவும் , அடையாள அட்டை தொடர்பில் ஏற்படுகின்ற சகல பிரச்சினைகளுக்குமான தீர்வினையும் பெற்றுக் கொள்ள முடியும்.


 
     
 

 

வடமேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகள் , பிரதேச செயலகங்கள் , தோட்ட நிறுவனங்கள் என்பவை நேரடியாகவே விண்ணப்பப்படிவங்களை இம்மாகாண அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கமுடியும். அவ்விதமாகவே வடமேல் மாகாணத்தினுள் இடம்பெறுகின்ற நடமாடும் சேவைகள் இவ் அலுவலகத்தின் மேற்பார்வையின் கீழ் இடம்பெறும்.

தபால்கள் உள்வருதல் ( Postal – in ) , விண்ணப்பங்களை நிழலுருப்படுத்தல் ( Scan ) , ஆவணங்களின் உண்மைத் தன்மையினை பரிசீலித்தல் (EQD) , அங்கிகாரமளித்தல் ( Authorize ) , தரவுப் பதிவு ( Data Enter ) , சிங்கள மொழி மாற்றல் ( Sinhala Transliteration ) , தமிழ் மொழி மாற்றல் ( Tami Transliteration ) ஆகிய செயல்படி முறைகள் இம்மாகாண அலுவலகத்தில் இடம் பெறுவதுடன் பதிவு செய்தல் ( Registration ) அதன் பின்னர் அச்சிடல் ( Print ) , தரப் பரிசோதனை ( QA ) , மென்தகடிடல் ( Laminate ) , தயாரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை நிழலுருப்படுத்தல்    ( Scan ) , தபாலிடல் ( Postal – Out ) என்ற செயல்படிமுறைகள் பத்தரமுல்லையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் இடம்பெறும்.

அடையாள அட்டையினை தயாரிப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் உரிய கிராம உத்தியோகத்தரின் , பிரதேச செயலாளரின் கையொப்பமிடப்பட்டு சான்றுபடுத்திய பின்னர்  தபால் மூலமாகவோ அல்லது நேரடியாக கையளிப்பதன் மூலம் விரைவாக அடையாள அட்டையினை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் வடமேல் மாகாணத்தில் வாழுகின்ற மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.