அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்
 

வௌளம் மற்றும் மண்சரிவினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம்

 
 

வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுடைய காணாமல் போன  தேசிய அடையாள அட்டைகள் மற்றும் சேதமடைந்த , தெளிவற்ற நிலைமையிலுள்ள தேசிய அடையாள அட்டைகளின் இணைப்பிரதியினை வழங்கும் விசேட வேலைத்திட்டமானது எமது திணைக்களத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இங்கு பிறப்புச் சான்றிதழ் , உத்தேச வயதுச் சான்றிதழ் , தேடுதல் விளைவுப் பத்திரம் ஆகிய முதன்மை ஆவணங்கள் இல்லாதவிடத்தும் விண்ணப்பதாரர்கள் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பப்படிவங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்களை திணைக்கள பதிவுகளோடு ஒப்பிட்டு நோக்கிய பின்னர் தேசிய அடையாள அட்டைகளை தயாரிப்பதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அனைத்து விண்ணப்பதாரர்களும் உரிய பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தரிடம் அடையாள அட்டைகளுக்குரிய விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ளவேண்டும். அடையாள அட்டைகள் காணாமல் போயுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களும் அதுபற்றி குறிப்பிடப்பட்ட பொலிஸ் முறைப்பாட்டு அறிக்கையுடன் குறித்த பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரின் மேலொப்பத்துடன் முறையாக பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தினை திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

 இவ்விசேட வேலைத்திட்டத்தின் கீழ் அடையாள அட்டைகளை தயாரிக்கையில் பாதிக்கப்பட்ட பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளர் மூலம் குறித்த விண்ணப்பதாரர்கள் வௌளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது பற்றியும் ,  அடையாள அட்டையினை தயாரிப்பதற்கு தேவையான ஆவணங்கள் அழிவடைந்துள்ளது பற்றியும் உறுதிப்படுத்தப்படுவது கட்டாயமானதாகும்.