அடையாள அட்டை - நம்பகத்தன்மையான தனிநபர் அடையாளம்
Hit Counterபார்வையாளர்கள்
 

மத்திய மாகாணத்திற்கென மாகாண அடையாள அட்டை அலுவலகமொன்று ...

 

 
 

e-NIC என்றழைக்கப்படுகின்ற இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை என்ற கருத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகத்தை, நுவரெளியா ஹாவாஎளிய லேடி மெக்கலம் டிரைவ் எனுமிடத்தில் அமைப்பதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, இவ் அலுவலகக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 2019.07.15 ஆம் திகதி மு.ப. 09.05 மணிக்கு வீற்றிருந்த சுப வேளையில் மாண்புமிகு பெருந் தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. சர்வ மத வழிபாடுகளின் பின்னர் பிரித் பாராயனத்திற்கு மத்தியில் அடிக்கல் நாட்டப்பட்டு, அதனைத் தொடர்ந்து மாண்புமிகு நவீன் திசாநாயக்க அவர்களின் கரங்களினால் நினைவுப் பலகை திறந்து வைக்கப்பட்டது.

இவ் வைபவத்தில் நுவரெளியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கௌரவ கே.கே. பியதாச (பா,உ.), நுவரெளியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உப தலைவர் கௌரவ எம். திலகராஜா (பா,உ.), நுவரெளியா மாநாகர முதல்வர் நந்தனலால் கருணாரத்ன, தலவாக்கலை மாநகர முதல்வர் அசோக்க சேபால ஆகியோரும் அதே போன்று, ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் திரு. பீ. வியானி குணதிலக்க, மாவட்டச்  செயலாளர் திரு. எம்.பி.ஆர். புஷ்பகுமார, மேலதிக மாவட்டச் செயலாளர் திரு. பீ.ஏ. சரத்சந்திர, பிரதேச  செயலாளர் திரு. டப்.எம். ஆனந்த, உதவிப் பிரதேச செயலாளர் திருமதி பிரதீபிகா வீரசூரிய ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

1972 தொடக்கம் சுமார் அரை நூற்றாண்டு காலமாக நாட்டின் தலைநகரை மையமாகக் கொண்டு இயங்கி வந்த ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் சேவைகளை, மாகாண அலுவலகங்கள் ஊடாகவும், பிரதேச அலுவலகங்கள் ஊடாகவும் பன்முகப்படுத்தி அல்லது விஸ்தரித்து, தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்கும் எந்தவொரு இலங்கைப் பிரஜைக்கும் குறுகிய மற்றும் குறித்துரைக்கப்பட்ட காலப்பகுதிக்குள் தேசிய அடையாள அட்டையை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதே திணைக்களத்தின் நோக்கமாகும்.


 
     

 

 

e-NIC என்றழைக்கப்படுகின்ற இனிலத்திரனியல் தேசிய அடையாள அட்டை கருத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக, தற்சமயம் நிறுவப்பட்டுள்ள மாகாண அலுவலகங்களும், அதே போன்று எல்லா பிரதேச கிளை அலுவலகங்களும் VPN தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தொடரறா முறையூடாக (Online) பிரதான அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள தரவுத் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதே போன்று தற்போதைக்கு தீவு முழுவதும் உட்படுமாறு பதிவு செய்யப்பட்டுள்ள புகைப்பட நிலையங்கள் ஊடாக சர்வதேச சிவில் விமான சேவைகள் அமைப்பின் (International Civil Aviation Organization – ICAO) தரநிர்ணயங்களுக்கு ஏற்ப, உயர் தரத்தில் விண்ணப்பதாரியின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, தொடரறா முறை (Online) ஊடாக திணைக்களத்தின் தரவுத் தளத்திற்குப் பெற்றுக் கொள்ளப்பட்டு, புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பொதுவாக ஸ்மார்ட் அடையாள அட்டை (Smart Identity Card) என்றழைக்கப்படுகின்ற கச்சிதமான அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இவ் வேலைத் திட்டங்களை மேலும் விஸ்தரித்து பொது மக்களுக்கு மேலும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அவசர தேவைகளுக்காக ஒருநாள் சேவை ஊடாக அடையாள அட்டைகளைப்  பெற்றுக் கொள்வதற்கான வசதிகளையும் கூட, தற்சமயம் நிறுவப்பட்டுள்ள மாகாண அலுவலங்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் தற்சமயம் எடுக்கப்பட்டு வருவதுடன், இவ்வருட இறுதிக்குள் இவ் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் சேவைகளை விஸ்தரிக்கும் அல்லது பன்முகப்படுத்தும் இவ் வேலைத் திட்டத்தின் கீழ், வடமேல் மாகாண அலுவலகம் குருணாகல் நகரிலும், கிழக்கு மாகாண அலுவலகம் மட்டக்களப்பு நகரிலும், வடக்கு மாகாண அலுவலகம் வவுனியா நகரிலும் நிறுவப்பட்டு தற்சமயம் வெற்றிகரமாக பொது மக்களுக்கான சேவைகளை வழங்கி வருவதுடன், காலி நகரில் அமைக்கப்பட்ட தென் மாகாண அலுவலகம் காலக்கிரமத்தில் பொது மக்களிடத்தில் கையளிக்கப்படவுள்ளது. அதே போன்று தற்சமயம் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண அலுவலகத்தின் நிர்மாணப் பணிகளை 2020 இறுதியாகும் போது பூர்த்தி செய்து, பொது மக்களிடத்தில் கையளிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் அலுவலகத்தின் மூலம் மத்திய மாகாண மக்களுக்கு, தமது விண்ணப்பங்களை ஒப்படைத்தல், அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பாக விசாரித்தல், தேசிய அடையாள அட்டை தொடர்பில் எழுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளல் முதலான சேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.